மனிதர்களை இழப்பதென்பது 
பெரிதும் என்னை 
அலுப்படைய செய்வதில்லை 
அதிலெனக்கு முக்கால் அனுபவம் 
ஆனால் 
அதன் ஆயத்தங்களில்தான் 
பெரும்பயிற்சி வேண்டுகிறேன் 
இழப்பை விடவும்
இழப்பின் பயம் கொடிது...
இலக்கியா
என் மாயாவி
நீ என் மாயாவி... 
என் இதயம் குழப்பி... 
ஒரு நொடி அருகில்... 
அடுத்த நொடி தூரமாய்... 


தலையை தடவினாய்... காதலா? 
சோகம் கேட்டாய்... நட்பா?
குடையில் அழைத்தாய்... காதலா? 
குறும்பாய் சிரித்தாய்... நட்பா? 
மாயமோ உன் பார்வை 
மாயமோ உன் அன்பு 
மாயமோ... மாயமோ... மாயமோ...

நீ என் மாயாவி... 
என் இதயம் குழப்பி... 
ஒரு நொடி அருகில்... 
அடுத்த நொடி தூரமாய்... 

கூட்டத்தில் தள்ளினாய்... நட்பா? 
தனிமையில் தேடினாய்... காதலா? 
அழைப்பை மறுத்தாய்... நட்பா? 
இரவில் அழைத்தாய்... காதலா?
மாயமோ உன் பேச்சு 
மாயமோ உன் செயல் 
மாயமோ... மாயமோ... மாயமோ...

நேற்று காத்திருந்தாய்... காதலா? 
இன்று மறந்து போனாய்... நட்பா? 
கையை பிடித்தாய்... காதலா? 
பின்னர் விலகினாய்... நட்பா?
மாயமோ என் காதல் 
மாயமோ உன் மௌனம் 
விடை சொல்வாயா... மாயாவி... விடை சொல்வாயா...

நீ என் மாயாவி... 
என் இதயம் குழப்பி... 
ஒரு நொடி அருகில்..
அடுத்த நொடி தூரமாய்...
மிக்கேல்
காதலில் வாழ்கிறேன்
இறுக்கமான நாட்களிலும்
உன்னை மறக்காமல் 
நினைத்து விடுகிறேன்.
நீயும் நானும் 
கேட்ட அந்தப் பாடலை 
யாருமறியாமல்
ஆசை தீர கேட்கிறேன்.
நாம் சென்ற பாதைகளில் 
இன்னும் நடந்து செல்கிறேன்
அதே காதலோடு.
நீயும் நானும் 
எடுத்துக் கொண்ட
அந்த ஒற்றை புகைப்படத்தை
இன்னும் ரசிக்கிறேன் 
பத்திரமாக பாதுகாக்கிறேன்.
அவ்வப்போது 
உன்னைப் பற்றிய
நினைவுகளில்
எனக்கு நானே 
புன்னகை பூக்கிறேன்.
யாராவது 
உன்னைப் பற்றி பேசினால் 
அப்பாவி போல கேட்கிறேன்.
எங்கோ தூரத்தில் 
உன் பெயர் கொண்ட
விளம்பர பதாகையில்
என்னை நானே 
மீண்டும் வாழ்ந்து விடுகிறேன்.
உன்னருகில் நான் 
கவிதைகள் எழுதியதேயில்லை 
உன்னைப் பிரிந்த நான் 
உனக்கென 
கவிதைகள் எழுதாமலிருந்ததில்லை .
யாருக்கும் தெரியாமல் 
எந்த சந்தேகமுமில்லாமல்
அட உனக்கும் கூட தெரியாமல் 
நிதானமாக காதலிக்கிறேன்.
தொட்டுச் சென்றாலும்
தொலைதூரத்தில் சென்றாலும் 
மேகம் 
மேகம் தானே.
img