Vignesh G
கனவுலக படைப்பாளி
விளையாட்டில் கண்டறிந்தேன் வாழ்க்கையின் நுட்பங்களை  
தடைகளே சரியான பாதையைக் காட்டும் வழிகாட்டிகள்  
அச்சங்களை வெல்லும்போதே அரிய திறன்கள் பிறக்கும்  
வெற்றியிலும் தோல்வியிலும் வித்தைகள் பல கற்றேன்!

தளர்வடையாதே தோழனே! தனிமையில் வாழ்பவனே!  
மனதுக்குள் மறைந்திருக்கும் மாசற்ற உன் திறமையை  
விளையாட்டின் வழியாக வெளிக்கொணர அழைக்கிறேன்  
நிஜ உலகை சிறிது மறந்து நிம்மதியாய் வாழவாரும்!

வாருங்கள்! சேருங்கள்! மகிழ்ச்சியின் வாசலுக்கு!  
தனிமையிலே வாழ்வோரே! தளராத நம்பிக்கையுடன்  
புதிய உலகில் புதுவாழ்வு புதுமையுடன் காண்போமே!
img
வழிப்போக்கன் ஜெகா
கருவழியா கிரகம்
...

இந்த கிரகத்திற்கு எத்தனை 
கர்ப்பப்பை இருக்கிறது 
எத்தனை பிரசவம் இருக்கிறது,
இன்னும் 
எத்தனை முலைகள் இருக்கிறது,

எதற்காக இந்த ஜனனங்கள்?

தாய்க்கு கஞ்சி ஊற்றாத 
மகனை போல
அவளது அத்துணை 
இரத்தங்களையும்
குடித்து 
குடித்து 
கவுச்சி வீச நிற்க்கிறோம்!

- வழிப்போக்கன் ஜெகா
img
ரஞ்சித்.சி
ஒரு கவிதை சொல்கிறேன் கேள்!
அத்தை பொண்ண நெனச்சாலே! 
றெக்கை கட்டி பறக்குறம்மா! 
எதிரே வந்து நின்னாலே! 
வெட்கம் வந்து சேருதம்மா! 
வளையல் வாங்கிப் போடச் சொல்லி! 
மனசெல்லாம் சொல்லுதம்மா! 
மல்லிப் பூவை தலையில் வச்சி! 
என்னைக் காண வந்தாயம்மா! 
உன் காதோர ஜிமிக்கியாய்! 
ஊஞ்சலாக ஆடுறம்மா! 
உன் கொலுசு சத்தம் கேட்குறப்போ! 
கீதமாய் இனிக்குதம்மா! 
உன் பேச்சு சத்தம் கேட்குறப்போ! 
பாடலாய் கேட்குதம்மா! 
அத்தை மகளை மணமுடிக்க! 
குத்தாட்டம் போடுறம்மா! 
உன் மனசில் இருப்பதை! 
என்னிடத்தில் கூறம்மா! 
நான் உன் மாமன் மகன் தானே!
img