* கொஞ்சம் அணைக்காதிருங்கள் உங்கள் பாரம் பெரியதாய் இருக்கிறது கொஞ்சம் பேசாமல் இருங்கள் உங்கள் சொற்கள் நீளமாயிருக்கிறது கொஞ்சம் தள்ளி நில்லுங்கள் உங்கள் இருப்பு பலவீனமாக்குகிறது கொஞ்சம் அன்பு பாவிக்காமலிருங்கள் உங்கள் கரிசனம் மயக்குகிறது கொஞ்சம் மன்னிக்காதிருங்கள் உங்கள் பெருந்தன்மை கொல்லுகிறது இப்படி இப்படியென பேசி இப்படி இப்படியென இருங்கள் என சொல்லிவிட்டால் மட்டும் நடந்துவிடுமா அல்லது நிறுத்திதான் விடுவீர்களா என்ன? உங்கள் விருப்பம் போல் நீங்களிருங்கள் சல்லித்தனத்தின் பயன்கள் நல்லதே கேட்டதோ அது ஒரு மழை பெய்யட்டும் நனையமட்டும் செய்யுங்கள்.!
நீ என் மாயாவி... என் இதயம் குழப்பி... ஒரு நொடி அருகில்... அடுத்த நொடி தூரமாய்... தலையை தடவினாய்... காதலா? சோகம் கேட்டாய்... நட்பா? குடையில் அழைத்தாய்... காதலா? குறும்பாய் சிரித்தாய்... நட்பா? மாயமோ உன் பார்வை மாயமோ உன் அன்பு மாயமோ... மாயமோ... மாயமோ... நீ என் மாயாவி... என் இதயம் குழப்பி... ஒரு நொடி அருகில்... அடுத்த நொடி தூரமாய்... கூட்டத்தில் தள்ளினாய்... நட்பா? தனிமையில் தேடினாய்... காதலா? அழைப்பை மறுத்தாய்... நட்பா? இரவில் அழைத்தாய்... காதலா? மாயமோ உன் பேச்சு மாயமோ உன் செயல் மாயமோ... மாயமோ... மாயமோ... நேற்று காத்திருந்தாய்... காதலா? இன்று மறந்து போனாய்... நட்பா? கையை பிடித்தாய்... காதலா? பின்னர் விலகினாய்... நட்பா? மாயமோ என் காதல் மாயமோ உன் மௌனம் விடை சொல்வாயா... மாயாவி... விடை சொல்வாயா... நீ என் மாயாவி... என் இதயம் குழப்பி... ஒரு நொடி அருகில்.. அடுத்த நொடி தூரமாய்...